கீரனூர் அருகே அம்மாசத்திரத்தில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாக புதுகோட்டைக்கு வந்து கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விபத்தை பார்த்தவுடன் காரை விட்டு இறங்கி வந்து விபத்தில் சிக்கிய ஆறு பேரையும் மீட்டார்.
பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை அருகில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.