2020-2021ஆம் ஆண்டு மகளிருக்கான விலையில்லா ஆடுகள், கோழிகள் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளன. அதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகளும், ஒன்றரை லட்சம் பேருக்கு தலா 25 கோழிகளும், 12 ஆயிரம் பேருக்கு கறவை பசுக்களும் வழங்க முடிவு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான பணிகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.