மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பணியாளர் தேர்வாணைய விவகாரத்தில் அரசு கடமையை செய்துள்ளதாகவும், 99 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தங்கமணி கூறினார்.