உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த செட்டியக்காபாளையத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்க தி.மு.க துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில், தி.மு.க-வின் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என அமைச்சர் வேலுமணி கூறினார்.