கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் திட்டத்தை அமைச்சர் வேலுமணி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தால் நோய்கள் பரவும் போன்ற தகவல்களை வாட்ஸ் ஆப்-பில் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜாகீர் உசேனுக்கு ஜாமீன் வழங்கியது. தான் அனுப்பிய தகவல் தவறானது. ஆதாரமற்றது என்று வாட்ஸ் ஆப் மூலம் மறுப்பு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஜாகீர் உசேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.