தமிழ்நாடு

"மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடசித்தூர், கப்பாளங்கரை, கோவில் பாளையம் ஆகிய பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடசித்தூர், கப்பாளங்கரை, கோவில் பாளையம் ஆகிய பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கூட்டமாக வருவார்கள், வாக்கு கேட்பார்கள், பின்னர் சென்றுவிடுவார்கள் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வெளிநடப்பு பணியை தான் அவர்கள் செய்து வருவதாகவும் விமர்சித்தார். ​எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார். அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் எந்த பணிகள் விடுபட்டு இருந்தாலும் அதை நிறைவேற்றி தருவோம் என்ற உத்தரவாதத்தை தருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு