சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பிறகு, போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் என, கூறினார்.