இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் பட்டய கணக்காளர் பணிக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சேலம் மாவட்டம் கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.