தமிழ்நாடு

கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - அமைச்சர் ஆய்வு செய்த போது பரபரப்பு

மதுரை அருகே அமைச்சர் செல்லூர் ராஜூ நின்று கொண்டு இருந்த புதிய கட்டிடத்தில் டைல்ஸ் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

மதுரையை அடுத்த, செல்லூர் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த ரவுண்டானாவை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்கு கபடி வீரர்கள் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு அவர் மக்கள் முன்பாக பேசினார். அப்போது கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டு இருந்த டைல்ஸ்கள் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. செல்லூர் ராஜூ நின்று கொண்டு இருந்த இடத்தின் அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவசர அவசரமாக காவல்துறையினர் மற்றும் தொண்டர்கள் அவரை மீட்டு அழைத்துசென்றனர். 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் ஆய்வின் போதே இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து

Chennai Crime டையப்பரில் மறைக்கப்பட்ட ரூ.1கோடி `விபரீதம்’ - சர்வதேச தொடர்பா என கிடுக்கிபிடி விசாரணை

Haryna வேண்டுமென்றே இடித்த கார்.. இழுத்து செல்லப்பட்ட பெண் ரைடர் - குலைநடுக்க வீடியோ

Bank | அடகு வைத்த நகைகளுக்கு பதில் போலி நகைகள்.. பேங்கிலேயே மெகா மோசடி