தமிழ்நாடு

"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் சரோஜா

குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* தமிழகத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் சம்பள உயர்வுடன் சிறப்பு காலமுறை சம்பளம் வழங்கப்பட்டதோடு, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று சம்பளம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* தமிழகத்தில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளதாகவும், இந்த பணியிடம் மற்ற மாநிலங்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

* ஓய்வு பெற்ற 54 ஆயிரத்து 340 சத்துணவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஆயிரத்து 500ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு பணியாளர்களின் சம்பளம், மற்ற படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுக்கு 58 சதவீதத்தை அரசு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* எனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்