சென்னையில் கொரோனா தொற்றைக் குறைக்க மண்டல அளவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மணலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார். பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசு அறிவித்துள்ள12 நாள் முழு ஊரடங்கிற்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்து, நோய் தொற்றைக் குறைக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.