அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, 15 நாள்களுக்குள் 750 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எப்படி படித்து முடித்து உத்தரவிட முடியும் என்றும், இதே அவசரம் அனைத்து வழக்குகளிலும் இருக்குமா என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சதவீதம் தான் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.