தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஆளுநருக்கு ம.நீ.ம கட்சியினர் தபால் அனுப்பி போராட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஆளுநருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஆளுநருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, ராஜகோபுரம் எதிரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அக்கட்சியினர், பின்னர் அங்கிருந்து காந்தி வேடமணிந்த சிறுவனுடன் ஊர்வலமாக அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு தங்களது மனுவை தபாலில் அனுப்பினர். இதற்கு மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்