தமிழ்நாடு

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்

முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி

முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.

* இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏதாவது ஒரு நல்ல ஆலோசனையை, ஸ்டாலின் வெளியிட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

* அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, அரசை குற்றம் சுமத்தி திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டு வருவதாக, குறிப்பிட்டுள்ளார்.

* கொரோனாவை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் பதில் அளித்ததில் என்ன தவறு இருக்கிறது? என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

* முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர் என்றும், கடவுள் பெயரை சொன்னாலே கோபம் கொள்ளும் ஸ்டாலினின் வெளிப்பாடு தான், அவரது அறிக்கையில் தெரிவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

* விமானம் மற்றும் ரயில்களில் வந்த பயணிகள் மீதும், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீதும் முதலமைச்சர் பழி போட்டதாக ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ள ராஜேந்திரபாலாஜி,

* இந்த நோய் தமிழகத்தில் உருவானது அல்ல என அனைவருக்கும் தெரியும் என்றும், எனவே முதலமைச்சர் பற்றி அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* ஏதோ அதிமுக அரசு தான், கொரோனாவை தோற்றுவித்தது போல தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்புவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,

* தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல் ஸ்டாலினின் அறிக்கை இருப்பதாகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?