தமிழகத்தில் லாட்டரி விற்பனை நடப்பது கவனத்திற்கு வரும் நிலையில், அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதனை தெரிவித்தார்.