தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என தெரிவித்தார். இக்கல்லூரியை கேரளாவை சேர்ந்த ரமாதேவி என்பவர், போலி ஆவணங்கள் தயாரித்து நிர்வாகம் செய்து வருவதாக குற்றம் சாட்டிய மக்கள், கல்லூரியை மீட்டு தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கல்லூரி பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.