தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 10 ஆயிரத்து 421 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதேபோல , மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக, மத்திய அரசு, அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.