கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு 5 நாட்களில் தற்காலிக சந்தையை உருவாக்கியதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,
கோயம்பேடு வர்த்தகர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லாத காரணத்தால்தான் திருமழிசைக்கு சந்தை மாற்றப்பட்டது என்றார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். கொரோனா என்ற ஆங்கில வார்த்தைக்கு தீ நுண்ணி என்று புதிய சொல்லை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.