தமிழ்நாடு

"ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் என குற்றம் சாட்டினார்.

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோயில், குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, திருமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் என குற்றம் சாட்டினார். குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அறநிலையத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள குழு நல்ல முடிவை எடுக்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்