வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, குருசிலாப்பட்டு மற்றும் இருனாபட்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் நிலோபர் கபீல், அப்பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் இருக்கும் கிணற்றை பார்வையிட்டு, அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.