"தமிழகத்தில் 938 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.