தமிழ்நாடு

பாடலாசிரியர் தாமரையை பாராட்டிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், அகராதியியல் விழிப்புணர்வு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாடலாசிரியர் தாமரை தமது பாடல்கள் ஒவ்வொன்றிலும், ஏதாவது ஒரு வழக்கொழிந்த தமிழ்ச் சொல்லை பயன்படுத்தி வருவது, வரவேற்கத்தக்கது என்றார்.

முன்னதாக, புதிய கலைச் சொற்களை உருவாக்கிய மாணவிகளுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்