2021 ஆம் ஆண்டில் கூட நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தமிழகத்தில் அதிமுகவிற்கு மீறிய கட்சி இல்லை என குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி அளித்ததால் நாடாளுமன்றத்தில், மசோதாவை ஆதரித்தோம் என்றும் கூறினார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.