தமிழ்நாடு

"நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களின் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்ற முறையானது உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் சாலைகளை சீரமைத்தல், அகலப்படுத்துதல், மழை நீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு பணம் சேமிக்கப்பட்டு வருவதாகவும், இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்