தமிழ்நாடு

மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான நடவடிக்கைகளை வெற்றிகரமாக எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை ஆலந்தூரில் உள்ள கங்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அன்னதானத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் மொழிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கை வந்தால், தமிழ் மொழியை காக்கின்ற வகையில் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சென்னையில் நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடீநிர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், மக்கள் தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். மேலும், விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தி.மு.க. விளம்பரத்திற்காக தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், மக்களின் தாகத்தை தீர்க்க என்ன விலையையும் கொடுக்க அ.தி.மு.க. கட்சியும், தமிழக அரசும் தயாராக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து அறிவிப்பு உரிய நேரத்தில் வரும் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தி.மு.க. பெற்ற வெற்றி தற்காலிகமானது தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்