தமிழ்நாடு

"கோவையில் தங்க நகை தொழில் பூங்கா" - அமைச்சர் பெஞ்சமின்

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பெஞ்சமின், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என தெரிவித்தார். இதே போல் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகளிலும் புதிய தொழிற்பேட்டை அமைப்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்