தமிழ்நாடு

2 முறை நிரம்பிய மேட்டூர் அணை - வறட்சியில் தஞ்சை ஏரிகள்!

மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலும் கூட, பாசன ஏரிகள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை

தந்தி டிவி

மேட்டூர் அணை 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்து சேர்ந்து நீண்ட நாட்களாகியும், பாசன ஏரிகளுக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள காவனி ஏரி, சானுரப்பட்டி ஏரி, ஏலா ஏரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உடனடியாக ஏரிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்