காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரத்து 119 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 97 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 61 புள்ளி ஒன்று எட்டு டிஎம்சியாகவும் இருக்கிறது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து, 6 ஆயிரத்து 850 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.