தமிழ்நாடு

சரக்கு வாகனத்தை வழிமறித்த காட்டு யானை - அச்சத்தில் உறைந்த ஓட்டுநர்

கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சரக்கு வாகனம் ஒன்றை காட்டு யானை ஒன்று திடீரென்று வழிமறித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சரக்கு வாகனம் ஒன்றை காட்டு யானை ஒன்று திடீரென்று வழிமறித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யானைகளின் வலசை காலம் என்பதால் வனத்தை ஒட்டியுள்ள சாலைகள் மற்றும் மலையடிவார சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஆனைகட்டி செல்லும் சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை சாலை ஓரம் நின்றிருந்த காட்டு யானை திடீரென்று வழிமறித்தது. வாகனத்தின் முன் பக்க விளக்குகள் ஒளிர்ந்தபடி இருந்த நிலையில், கண்ணாடியின் மீது தலையை உரசியபடி யானை நின்றதால் ஓட்டுநர் அச்சத்தில் உறைந்தார். யானையை விரட்டும் நோக்கில் எவ்வித நடவடிக்கையிலும் ஓட்டுநர் ஈடுபடாததால், யானை அமைதியாக கடந்து சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்