தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு எதிரொலி : அண்ணாசாலை இரு வழிப்பாதையாக மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

தந்தி டிவி
மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. மெட்ரோ ரயில் பணிக்காக 2011 ஆண்டு, அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அண்ணா சாலையில் எல்ஐசி மற்றும் ஸ்பென்சர் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லக்கூடிய வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக இயக்கப்பட்டன. இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஒருவழி சாலையாக இருந்த அண்ணா சாலை காலை 8 மணி முதல் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இரண்டு நாட்கள் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இந்த சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்