தமிழ்நாடு

அவசரப்பட்ட பொதுமக்கள்... மிரண்டு நின்ற மனநிலை பாதிக்கப்பட்டவர் - கண்கலங்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

வடமதுரை அருகே உள்ள கொம்பேறி பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து பொதுமக்கள் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், குழந்தைகளைக் கடத்துவதற்காக வந்தவர் என நினைத்து பொதுமக்கள் அவரை தாக்கினர். மேலும், அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவர, பொதுமக்கள் மேலும் தாக்கவே அந்த இளைஞர் காயமடைந்தார். அப்போது தாக்குதலில் காயமடைந்த நபரை, மனிதநேயமிக்க பொதுமக்களில் சிலர் மீட்டு, தேநீர் மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்த நபரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புக்கு உள்ளானது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி