தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பணிகள் தொடங்காத நிலையில், இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்களை சந்தித்துள்ளார்.அவர்களிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அலுவலர்களை உடனடியாக நியமித்து, திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுப்படுத்துவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாக, சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், திட்டத்திற்கான நிதி 2 ஆயிரம் கோடியா உயர்ந்துள்ளதால், அதற்கான நிர்வாக அனுமதி மற்றும் அமைச்சரவை ஒப்புதலை பெற்று முடிக்கவும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான, ஜப்பான் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் இறுதிக்குள் கையெழுத்தாகும் என அரசு செயலாளர்கள் கூறியதாக, சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்