தமிழ்நாடு

மேகதாது அணை கட்டும் விவகாரம் : மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணை கட்டும் கோரிக்கையின் மூலம் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் ஆதாயம் தேடுவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

மேகதாது அணை கட்டும் கோரிக்கையின் மூலம் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் ஆதாயம் தேடுவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை மாநில உறவை எடியூரப்பா சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறினார். எனவே, மேகதாது அணை குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய அரசு, தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க, ராசி மணலில் அணை கட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பி. ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்