Meghamalai | மேகமலை விவகாரம் - மலைக்கிராம மக்களை சந்தித்து தேனி ஆட்சியர் ஆய்வு #Meghamalai #Srivilliputhur #Theni #Collector ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில், 98 கிராமங்களைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் வெளியேற்றப்படுவதாகக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்குச் சென்று மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பல தலைமுறைகளாக வசிப்பதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தார். மஞ்சனூத்து வனச்சோதனைச் சாவடி பகுதியில் மக்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தமிழக அரசு சார்பில் மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்றும், அரசு எப்போதும் மலைக்கிராம மக்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.