தமிழ்நாடு

கொரோனாவுக்கு சென்னையில் 3 போலீசார் பலி- சக காவலர்கள் அதிர்ச்சி, அச்சம்

கொரோனாவுக்கு சென்னையில் 3 போலீசார் பலி- சக காவலர்கள் அதிர்ச்சி, அச்சம்

தந்தி டிவி

கொரோனாவுக்கு சென்னையில் 3 போலீசார் பலி- சக காவலர்கள் அதிர்ச்சி, அச்சம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு மூன்று போலீசார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மகாராஜன்,கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென இன்று அதிகாலை உயிரிழந்தார்.அதே போல் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கருணாநிதிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முருகேசன், காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உளவுத்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 போலீசார் உயிரிழந்த நிகழ்வு சக காவலர்கள் இடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்