தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தயாரிக்கும் இடம் குறித்து வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படும் திருஞானசம்பந்தர் மண்டபத்தில், தேவாரம், திருவாசகம் பாடசாலை நடத்த மதுரை ஆதினத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருஞானசம்பந்தர் மண்டபத்தில் லட்டு தயாரித்து வழங்கப்பட்டு வரும் சூழலில், அங்கு தேவார பாடசாலை அமைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, மண்டபத்தில் 291-வது மதுரை ஆதினம் பொறுப்பில் இருந்தவரை தேவார பாடசாலை நடத்தப்பட்டதாகவும், இடையில் அவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோயில் வரலாறு, மீனாட்சி கோயில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதி, லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், தேவார பாடசாலை அமைக்கவும், மாசி திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.   

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு