தமிழ்நாடு

மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் - கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் முடிவெடுத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் முடிவெடுத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுத தமிழக அரசுக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த 108 மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க மருத்துவ கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். கருத்துருவை பரிசீலித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே