தமிழ்நாடு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழக அரசு சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என அதிமுக- திமுக - திராவிடர் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

மேலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களை போல தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய கோரி பாமக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து வழக்குகளும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக , திமுக, பாமக மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தனித்தனியாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

இதையடுத்து அனைத்து மனுக்களுக்கும் வரும் திங்கள் கிழமைக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினம் ஒத்தி வைத்தனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC