கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு-இ-வலைதள சந்தைப் படுத்துதல் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை குறிப்பிட்டார். சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர் இதனால், வருமான வரி பிரச்சினை வராது என்றார்