மயிலாடுதுறையில் உள்ள அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளாக கேன்டீன் நடத்தி வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றார். ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரியில் சேகர் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கேன்டீன் நடத்தி வந்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவுபெற்ற நிலையில் அதை புதுப்பித்து தராமல் அவரை இடத்தை காலி செய்ய கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், கல்லூரி வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.