தமிழ்நாடு

மயிலாடுதுறை to திருச்சி 4 ரயில்கள் ரத்து - வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருச்சி பகுதியில் ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மயிலாடுதுறை - திருச்சி மார்க்கமாக இன்று இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றங்களும், ஒரு சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், இன்று தஞ்சை, திருச்சி மார்க்கமாக செல்லாமல், திருவாரூர் மார்க்கமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்மலை வரையிலும், மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் திருவெறும்பூர் வரையிலும் இயக்கப்படும். மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மயிலாடுதுறை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி