நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலி சுரங்க பகுதிக்கு வந்த பாஜகவினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது இடத்தில் எப்படி படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.