ஓசூரில் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த முகமூடி கொள்ளையர்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்... நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த நான்கு பேர் அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து, திருட முயற்சி செய்துள்ளனர். வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் இல்லாததால் அவர்கள் திரும்பி வந்துள்ளனர். அதேபோல நள்ளிரவில் அங்குள்ள மற்றொரு வீட்டுக்குள்ளும் சென்று திருடுவதற்கு முயற்சி மேற்கொண்டு உள்ளனர். திருடர்கள் நான்கு பேரும் தெருக்கள் வழியாக சென்றபோது வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் அவர்களை பார்த்து நீண்ட நேரம் குரைத்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது முகமூடி கொள்ளையர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து சர்வ சாதாரணமாக சென்றது அப்பகுதியினருக்கு தெரிய வந்துள்ளது.