தமிழ்நாடு

குற்றால அருவியில் குளித்த கல்யாண பொண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி -அரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் குற்றால புலி அருவியில் குடும்பத்துடன் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளில் பெண் ஒருவர், தனது கையில் அணிந்திருந்த சுமார் ஒரு பவன் தங்க மோதிரத்தை தவறவிட்டார். தொலைத்தது திருமண மோதிரம் என்பதால்

செய்வதறியாது தவித்த அந்த பெண் குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரனிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் பேரூராட்சி பணியாளர்களை அனுப்பி புலியருவி பகுதியில் உள்ள சிறிய தடாகத்தில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட வைத்தார்.

அவர்களுடன் போலீசாரும் இணைந்து, சுமார் அரை மணி நேர தேடுதலுக்குப்பின், மோதிரத்தை கண்டுபிடித்து தொலைத்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்