பேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். பேட்ட திரைப்படம் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. அப்போது சென்னையை சேர்ந்த இளவரசன், காமாட்சி உட்லெண்ட்ஸ் திரையரங்கில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், புது தம்பதியினரை நேரில் அழைத்து வாழ்த்து கூறிய ரஜினி, பட்டு சேலை பட்டு வேஷ்டி ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.