கார் மரத்தில் மோதி திருமணத்திற்கு சென்ற 4 பேர் பரிதாப பலி கேரளம் மாநிலம் கண்ணூரில் திருமண விழாவில் பங்கேற்க சென்றபோது, கார் மரத்தில் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஷான் என்பவர், கண்ணூரில் நடைபெற இருந்த நண்பரின் திருமணத்தில் பங்கேற்க தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதியுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூங்கியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.