தமிழறிஞர் மறைமலையடிகளின் வீடு நினைவு இல்லமாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பபடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார். மறைமலையடிகளின் பிறந்தநாளையொட்டி, சென்னை பல்லாவரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைமலையடிகள் வீட்டை புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.