தமிழ்நாடு

ரூ.10,417 கோடியில் பல திட்டங்கள்.. இன்று திறந்து வைக்கும் முதல்வர்

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 10 ஆயிரத்து 417 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை திறந்து வைத்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பில், 8 ஆயிரத்து 801 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ சார்பில் சுரங்க நடைபாதைகள், சிவகங்கை, தூத்துக்குடியில் பாசன கட்டமைப்புகள், திருச்சி முக்கொம்பில் நீரொழுங்கி, வேளாண் கட்ட‌டங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இவற்றை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும், ஆயிரத்து 615 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு துறைகள் சார்பில் தொடங்கப்பட உள்ள திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்