உலக வரலாற்றில் கமலா ஹாரிஸ்..தமிழக கோயிலில் இருக்கும் கல்வெட்டில்..அபூர்வம்.. துள்ளி குதிக்கும் மன்னார்குடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட அதிபர் பைடன் ஆதரவு அளித்திருப்பதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியிருக்கும் அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக ஆதரவு தெரிவித்துள்ளார். கமலா ஹாரிசுக்கு கட்சியில் ஆதரவும் குவிந்து வருகிறது. கமலா ஹாரிஸ் இந்தியா வம்சாவளி பெண் ஆவார். கமலா ஹாரிசின் தாயார் சியாமளா மன்னார்குடி துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இந்தக் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலுக்கு கமலா ஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்த விபரம் இன்றும் கோயில் கல்வெட்டில் உள்ளது. இப்போது அவர் அதிபர் வேட்பாளர் ஆவார் என கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெற்றிபெற்றதும் துளசேந்திரபுரம் கிராமத்திற்கு கமலா ஹாரிஸ் வர வேண்டும் எனவும், இந்தியா அமெரிக்கா உறவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.