நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு
12வது பட்டாலியனில் கமாண்டண்டாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2013ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலமாக டி.எஸ்.பியாக பணிக்கு சேர்ந்தவர் அருண். பின்னர் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற அருண் மணிமுத்தாறு 12வது பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்துள்ளார். சுமார் 12 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த எஸ்.பி.அருணின் ராஜினாமா தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.